எதிர்வரும் (12.11.2023) அன்று தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்யவுள்ள விண்ணப்பதாரர்கள், 2023-ம் ஆண்டிற்கான தற்காலிக பட்டாசு உரிமம் (Temporary Crackers License – 2023) பெறுவதற்கு
தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக, வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008 விதிமுறைகளுக்கு உட்பட்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அனுமதியின்றி, உரிமம் பெறாமல், பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments