திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் ராஜா காலனி அருகே தமிழ்நாடு கூட்டுறவு மாநில வளர்ச்சி வங்கி மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கட்டிடம் உள்ளது.
வங்கி கட்டிடத்தின் மதில் சுவர் இடிந்து சாலையில் விழுந்து உள்ளது. திருச்சியில் மதியம் முதல் கனமழை, மிதமான மழை என தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.
அந்த வங்கியின் மதில் சுவர் 30 வருட பழமையானது. தொடர்ந்து மழை பெய்வதால் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்வோர் அருகாமையில் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது பிரதான சாலையாக இருப்பதால் மத்திய பேருந்து நிலையம் பகுதிக்கு செல்வோர் கருமண்டபம், பொன்நகர் மற்றும் நகர பகுதிக்கு உள்ளே வருபவர்களும் இந்த சாலையை பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்வதால் உடனடியாக தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வங்கி கட்டிடத்தில் வெளியே பாதுகாப்பு காவலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments