கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு காட்டூர் பாப்பாகுறிச்சி பிரதான சாலையின் நடுவே சாலையை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக விழாமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழா மேடையானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதியடைந்துள்ளனர். அதேபோல் விழா மேடை அருகே பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக மருத்துவமனையில் நன்கு வளர்ந்து நிழல் தரக்கூடிய மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.
மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் விளம்பரத்திற்காக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற செயலில் ஈடுபடும் திமுகவினரின் செயல் சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments