108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.
ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாளான இன்று மாலை ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனையடுத்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாயார் சன்னதி கொலு மண்டபத்தில் இரவு ஸ்ரீரங்கத்து கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கியது.
கோவில் யானையின் இத்தகைய வியத்தகு செயலை பெருந்திரளான குழந்தைகள் முதல் பெரியவர்கள் பக்தர்கள் வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.
ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஏழாம் நாளில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய இயலும் தாயார் திருவடி சேவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சீரகம் கோவில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments