திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது புளியஞ்சோலை. பிரபல சுற்றுலா தளமான புளியஞ்சோலையில் நீர் பிடிப்பு பகுதியான கொல்லிமலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கொல்லிமலை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் நேற்று இரவு முதல் புளியஞ்சோலை அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி புளியஞ்சோலை ஆற்றுக்கு செல்லவும் அங்கு குளிக்கவும் பொது மக்களுக்கு தடை.
விதித்து இருப்பதாகவும் பாதுகாப்பு காரணம் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீர்வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments