Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் வழக்குகளை சமரசம் செய்து முடித்து கொள்ள அரிய வாய்ப்பு!!

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, வருகின்ற 12ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் மன்றம் நடைபெற உள்ளது.

Advertisement

இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் – வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல் – வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அரிய வாய்ப்பாக அமைய உள்ளது.

Advertisement

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால் ஏற்படும் பயன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. தரப்பினர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத் தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம்.

2. சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்..

3. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.

4. தரப்பினர்களுக்கிடையே வெற்றி- தோல்வி என்ற மனம் ஏற்படாது.

எனவே, பொதுமக்கள்- வழக்காடிகள் 12.12.2020- ம் தேதியன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Advertisement

இது சம்மந்தமாக, தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை திருச்சிராப்பள்ளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (A.D.R. வளாகம்) அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சிராப்பள்ளி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2460125 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *