திருச்சி மாநகரில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
அப்போது, திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி திரையரங்கம் மேம்பாலத்தின் கீழ் டிக்கெட்டுகளை திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த வரகனேரியை சேர்ந்த கதிரவன் என்பவரை (18.10.23)-ந் தேதி அன்றும்,
ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த ராஜாபாண்டி (27), தென்னூரைச் சேர்ந்த கண்ணன் (27), சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த இர்பான் (20), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் (21) ஆகியோர்களை கைது செய்தும் இன்று (19.10.23) மேற்படி நபர்கள் மீது 4 சட்டப்பிரிவுகளின்கீழ் பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments