திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசு பேருந்தை சிறைபித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முசிறி அருகே வெள்ளூர் அடுத்த சாலப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் வழியாக முசிறியில் இருந்து மாங்கரைப்பேட்டை, வெள்ளூர், வேப்ந்துறை, தெற்கு சித்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளை அரசு பேருந்து சென்று வருவதாகவும், இவ்வாறு செல்லும் அரசு பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர வேண்டும்.
இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைவர் எனக்கூறி அப்பகுதி மக்கள் முசிறி கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்து எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் அவ்வழியாக வந்த பேருந்தினை சிறைபித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேச்சுவார்த்தை நடத்தி முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து பின்னர் பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments