Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி – ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள மண்டல அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து நடத்துகிறது. இதில் சேர்வதற்கான தகுதி விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பு 12 வார காலம் நடைபெறுவதுடன் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தரப்படும்.

இப்பயிற்சியில் சிறப்பு அம்சமாக பஸ் வடிவிலான சிமுலேட்டர் வசதியும் உள்ளது. இந்த சிமுலேட்டர் சிறப்பு பயிற்சியின் மூலம் பயிற்சியாளர்களின் திறனை மேன்படுதிக்கொள்வதுடன் அவர்களின் ஓட்டும் திறனையும் மதிப்பீடு செய்து அதற்கேற்ப பயிற்சியளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – திருச்சி (TNSTC) மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் (IRT) இணைந்து வழங்கும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி குறைந்த பட்ச கட்டணத்தில் 12 வார காலம் கனரக வாகன பயிற்சி அளிக்கப்பட்டு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் IRT CERTIFICATE பயிற்சி முடிந்தவுடன் பெற்றுத்தரப்படும். கீழ்கண்ட தகுதியுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பம் செய்யலாம்.

குறைந்த பட்சத் தகுதிகள் : 

1. வயது : 20 வயதுக்கு மேல்

2. உயரம் : குறைந்த பட்சம் 155 செ.மீ. 3. எடை : குறைந்த பட்சம் 40 கி

4. ஓட்டுநர் உரிமம் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் (LMV) பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இத்துடன் பொதுப்பணி வில்லை (PSV Badge) பெற்றிருத்தல் வேண்டும். 

5. கண் பார்வை கண்ணாடி அணியாமல் 6/6 கண்பார்வைத் திறனும், நிறபேதமறியும் குறைபாடும், மாறுகண் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டும்.

6. உடல் நலம்: எந்தவித உடல் ஊனமும் இல்லாமல் இருக்க வேண்டும். 

சிறப்பு அம்சம் : பேருந்து வடிவிலான சிமுலேட்டர் (Simulator)யில் சிமுலேட்டர் பயிற்சி. 

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக கனரக வாகன பயிற்சி மையம் பெரிய மிளகுபாறை, கலெக்டர் ஆபிஸ் ரோடு, திருச்சி-620001.தொலைபேசி எண் : 9487898123, 94893 32126

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *