தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, மார்ச் மாதம் 23-ந் தேதி அதிமுக பிரமுகரின் காரில் ரூபாய் 2 கோடி எடுத்து வரப்பட்டது.
அப்போது திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே வந்த போது மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் இந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, ரூபாய் 2 கோடி கொள்ளை தொடர்பாக திருச்சியை சேர்ந்த சாமி ரவி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை போலீஸ் காவலிலும் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சாமிரவியிடம் இருந்து ரூ.1 கோடியே 65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சாமிரவி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். சாமிரவி உள்பட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி தீர்பளித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments