திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட பொலிரோ, டாடா சுமோ விக்டா, சுமோ கிராண்டி உட்பட 17 வாகனங்கள் (04-நான்கு சக்கர வாகனங்கள், 13-இருசக்கர வாகனங்கள்) தற்போது உள்ள நிலையிலேயே பதிவுச்சான்றிதழ் ரத்து செய்து (RC Surrender) பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது.

வருகின்ற (08.11.2023)ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் (07.11.2023)ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (08.11.2023) ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000/- மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%) முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

13 Jun, 2025
357
02 November, 2023










Comments