திருச்சி மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கான ஏடிஎம் மைய அறை வங்கிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இந்த ஏடிஎம் மையம் செயல்படவில்லை. இந்த கிராமத்தில் இரண்டு ஏடிஎம் மையங்கள் உள்ளது.
அது வேறொரு ஏ டி எம் தனியாக உள்ளது.வங்கியுடன் வாடிக்கையாளர்கள் வசதிக்காக உள்ள ஏடிஎம் மையம் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இது தொடர்பாக வங்கியின் மேலான இடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான பதிலும் வரவில்லை நாமும் தொடர்பு கொண்ட பொழுது அவர் கைபேசியை எடுத்து பதிலும் கூறவில்லை. உடனடியாக கனரா வங்கி அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏ டி எம் மையம் செயல்படாமல் இருப்பது திருப்பைஞ்சீலி கிராமத்தில் உள்ள மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments