Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உழைப்பவனை வைத்து இயக்கம் நடத்தினால் பலன் – திருச்சியில் பரபரப்பு- அச்சத்தில் உளவுத்துறை !!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக நடை பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை இன்று (5ம்தேதி) தொடங்குகிறார்.

முதல் தொகுதியாக மாலை 4 மணிக்கு மணப்பாறை சட்டசபை தொகுதியில், தொடங்கும் அண்ணாமலை, அங்கிருந்து. மாரியம்மன்கோயில் வழியாக வந்து பஸ்ஸ்டாண்டில் நிறைவு செய்து, அங்கு பொதுமக்களிடையே பேசுகிறார். மீண்டும், விராலிமலை தொகுதி இலுப்பூருக்கு செல்கிறார். வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட பாஜ நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சிவா மகன் சூர்யா இரு நாட்கள் முன் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அந்நிகழ்வே பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது திருச்சி முழுவதும் ஒரு அண்ணாவின் போஸ்டர் கண்ணை பறிக்கிறது. அது திமுகவில் டெரராக கருதப்பட்ட முக்கிய பிரமுகர் குடமுருட்டி சேகரால் ஒட்டப்பட்டுள்ளதுடன்,

அவர் வீட்டின் அருகே அதே வார்த்தைகள் அடங்கிய ஃபிளக்ஸ் பேனரும் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜான் பாண்டியன் குடமுருட்டி சேகர் வீட்டிற்கு வந்துவிட்டு சென்றார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. நாமதான் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாச்சே என்ன இது ஊரெங்கும் ஒரே போஸ்டாரா இருக்கு அண்ணாவுக்கு பாஜக கலர்ல மாலை போட்டு கலக்கிட்டிங்க என கேட்க,

ஆட ஏன்….. நீவேற 63 வயசு முடியப்போகுது உழைக்கற காலத்துல உழைச்ச கட்சியவிட்டுட்டு ஓய்வு எடுக்க வேண்டிய காலத்துலபோய் சேர முடியுமா அண்ணாவழி வந்த கட்சி என்கிறதாலேயும், அவரோட பிறந்தநாள் 15ம்தேதி வருதுங்கறதாலேயும் இங்கே உழைக்கிறவனுக்கு மரியாதை இல்லைனு மனசுல பட்டுச்சு அதனால அப்படி ஒரு போஸ்டர் அவ்வளவுதான், அதுசரி அதுக்கு முன்னாடி நவம்பர் 9ம் தேதி கே.என். நேருவின் பிறந்தநாள் வருகிறதே அதற்கு அப்புறம் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கலாமே எனக்கேள்வி கேட்பதற்குள் கட்டாகிப்போனது அலைபேசி அழைப்பு, என்ன நடக்கப்போகுதோனு கையை பிசைந்து கொண்டு காதை தீட்டிக்கொண்டு பத்திரிக்கையாளர்களை விட உளவுத்துறையினர் திருச்சி மாவட்டம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *