திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாடக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் விவசாய நிலத்திற்கு செல்லும் வாய்க்கால் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் தண்ணீரில் வீசப்பட்டு மிதக்கின்றன. அந்த ஆணுறைகளில் அரசு முத்திரை பொறிக்கப்பட்டிருப்பதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்க வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் வாய்க்காலில் வீசப்பட்டுள்ள ஆணுறைகள் அனைத்தும் காலாவதி ஆகாத ஆணுறைகளாக இருக்கின்றன.
விவசாய நிலத்தில் பாசனத்திற்காக செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவசாய நிலத்திற்கு செல்லக்கூடிய பாசன வாய்க்காலில் ஆணுறையை விசி சென்ற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்நிலையில் செய்தியாளர் கவனத்திற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரையிலும் அதிகாரிகளின் அலட்சியம் போக்கு பாசன வாய்க்காலில் வீசப்பட்ட ஆணுறைகளை அகற்றப்படாமல் கிடப்பது விவசாயிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments