பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் பயணம் செல்கின்றனர். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மறுநாள் திங்கட்கிழமை வேலை நாளாக இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு வர முடியாத சூழல் ஏற்படும். எனவே தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை (13.11.2023) பொது விடுமுறை அளிக்க வேண்டும் அதற்கு மாற்றாக சனிக்கிழமைகளில் வேலை நாளாக அறிவிக்கலாம் என்று ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, தீபாவளிக்கு மறு நாள், அதாவது நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவ லர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 13ம் தேதி ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments