திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் கிராமத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மயானத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்ததுடன் அதற்கு பட்டா பெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வாக்களி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments