தீபாவளி திருநாளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் இரண்டு இடங்களிலும், சோனா மீனா தியேட்டர் பகுதியில் ஒரு இடத்திலும் என மொத்தம் இரண்டு இடங்களில் மூன்று பிரிவுகளில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தினை திருச்சி மன்னார்புரம் பகுதியில் இருந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதாகவும், இப்பகுதிகளில் கூடுதலாக சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments