Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

ரூபாய் .25க்கு கீழ் வர்த்தகமாகும் மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக்கில் நிறுவனர்கள் பங்குகளை அதிகரித்தனர்

பாட்டியா கம்யூனிகேஷன்ஸ் & ரீடெய்ல் (இந்தியா) லிமிடெட் 2024 நிதியாண்டிற்கான அதன் நட்சத்திர காலாண்டு முடிவுகள் மற்றும் அரையாண்டு முடிவுகளை அறிவித்தது. சற்றே விவரங்களை பார்ப்போமா…. காலாண்டு முடிவுகளின்படி, நிகர விற்பனை 28.3 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் .9,435.82 லட்சமாகவும், நிகர லாபம் 24ம் நிதியாண்டில் 52 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 247.34 லட்சமாகவும் இருந்தது.

 அரையாண்டு முடிவுகளின்படி, நிகர விற்பனை 34.5 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 19,142.53 லட்சமாகவும், நிகர லாபம் H1FY24-ல் H1FY23-ஐ விட 91 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 604.82 லட்சமாகவும் உள்ளது. அதன் ஆண்டு முடிவுகளின்படி, நிகர விற்பனை 34.27 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 313.48 கோடியாகவும், நிகர லாபம் 61 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 8.48 கோடியாகவும் இருந்தது.

செப்டம்பர் 2023ல், நிறுவனர்கள் 73.65 சதவிகிதத்தில் இருந்து 73.66 சதவீதமாக பங்குகளை உயர்த்தியுள்ளனர். நிறுவனம் Apple, One Plus, Samsung, Vivo, Oppo, Realme, Mi, Motorola, Techno, Nothing, Noise, Boat, HP, Lenovo, Fire Bolt, போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் வலுவான கூட்டுறவைக் கொண்டுள்ளது. நிறுவனம் இந்தியா முழுவதும் 172 கடைகள் (160 சொந்தமானது மற்றும் 12 franchise ) கொண்ட ஒரு கடைக்கு 10 லட்சம் முதலீட்டை செய்திருக்கிறது.

பாட்டியா கம்யூனிகேஷன்ஸ் & ரீடெய்ல் (இந்தியா) லிமிடெட் மொபைல் கைபேசிகள், டேப்லெட்டுகள், டேட்டா கார்டுகள், மொபைல் பாகங்கள், மொபைல் தொடர்பான தயாரிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விநியோக வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று, பாட்டியா கம்யூனிகேஷன்ஸ் & ரீடெய்ல் பங்குகள் 4.98 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கின் விலையை ரூபாய் 22,12 ஆக நிறைவு செய்தது, பங்குகளின் 52 வார அதிகபட்சம் ரூபாய் 43.35 ஆகவும், அதன் 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூபாய் 13.10 ஆகவும் உள்ளது. பங்கு 3 ஆண்டுகளில் 175 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை வாரி அளித்தது, முதலீட்டாளர்கள் இந்த மைக்ரோ-கேப் பங்கு மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

(Disclaimer : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனை அல்ல.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *