ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் பூரி. இவர் திருச்சி சின்ன கம்மாள தெருவில் உள்ள கடையில் பணிபுரிகிறார். இவர் மனைவி, மகனுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது மகன் நவீன் பூரி (16) இன்று இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செந்தணீர்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி பக்கவாட்டு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அடியில் சிக்கனார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிர் இழந்தான்.
மேலும் சிறுவனுடன் சென்ற அவரது தம்பி படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயரிழந்தது தொடர்பாக வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments