சிதம்பரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு 40 பயணிகளுடன் திருச்சி வழியாக ஆம்னி பேருந்து ஒன்று இன்று(14.11.2023) காலை சென்று கொண்டிருந்தது. திருச்சி பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகே சென்ற பொழுது சாலை ஓரத்தில் உள்ள சிறு பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது.
உடனடியாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். ஓட்டுனர் காயத்துடன் உயிர் தப்பினார். காவல்துறையினர் தொடர்ந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய பொழுது தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை ஓர பள்ளத்தில் உள்ள மரத்தில் மோதி உள்ளது.
நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள் யாரும் அப்போது சாலையில் இல்லாதததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments