தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
Advertisement
அந்த வகையில் திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, கிராப்பட்டி லிட்டில் ஃப்ளவர் பள்ளி உட்பட பல இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்குதல், பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநகரச் செயலாளர் அன்பழகன் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், சேர்மன் துரைராஜ், , வழக்கறிஞர் பாஸ்கர் பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, மோகன்தாஸ் கிராப்பட்டி செல்வம் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அருண் போட்டோ கமால் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
Advertisement
Comments