திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மதுரை மெயின் ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் சுமார் 12 கடைகள் வரை இயங்கி வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் முகப்பு பகுதியில் ஷாஜகான் (45) என்பவர் பால் மற்றும் ஐஸ் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையினை பூட்டிவிட்டு மீண்டும் இன்று காலை பால் விற்பனைக்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே ஐஸ் பாக்ஸில் இருந்த ஐஸ்கிரீம்கள் மற்றும் கல்லாவில் இருந்த சுமார் 7000 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும் வணிக வளாகத்தின் பின்புறத்தில் ஐஸ்கிரீம் பெட்டிகளை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையெடுத்து துவரங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வணிக வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் மர்மநபர்கள் உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments