Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கடந்த 2 ஆண்டுகளில் 487 விருதுகள், அதிமுக ஆட்சியில் வெறும் 69 விருதுகள் மட்டுமே – அமைச்சர் பேச்சு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் ரூ. 30 லட்சம் மதிப்பில் கொடும்பபட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் எம்.பி. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மருத்துவத்துறை இணை இயக்குனர் லெட்சுமி, நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ், ஒன்றியக்குழு பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி முருகன், நகர செயலாளர் மு.ம.செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பன்னப்பட்டி கோவிந்தராஜன், வக்கீல் கிருஷ்ண கோபால், வேம்பனூர் ராஜேந்திரன், ஜான் பிரிட்டோ, பால்ராஜ், பால்பாண்டி, ஜேம்ஸ், கார்த்திக், கண்ணன், வெற்றிச் செல்வன், விடுதலை மோகன், ஆர்.வி.எஸ். சரவணன், செந்தில், குமரன், ராஜரத்தினம், சோலைராஜன், எங்க வீட்டு வேலன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்….. மணப்பாறையில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்ப்படும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பரிவில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் வேலைகள் 12 மாத காலக்கெடுவில் கட்டி முடிக்கப்படும். மேலும் இந்த வளாகம் பழைய அரசு மருத்துவமனை செயல்பட்ட இடம் என அமைச்சர் கூறினார். இந்த இடத்தில் 20 கோடி திட்ட மதிப்பில் 50 படுக்கை வசதிகள் கொண்ட அதி தீவிர சிகிச்சை பிரிவு அமையபட உள்ளது. அதற்கான டெண்டர் விடப்பட்டு 1 மாத காலத்திற்குள் அடிக்கல் நாட்டட்டும் என்றார்.

துறையூரில் கடந்தாண்டு நகராட்சித் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ரூ. 9 கோடியே 26 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவமனை முதல்வர் திறந்து வைக்க உள்ளார் . 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் 43 பணிகள் 34 கோடியே 22 லட்சம் திட்ட மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன விரைவில் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றால் அது திருச்சி மாவட்ட மாவட்டமாகதான் இருக்கும்.

டெல்லியில் உள்ள ஒரு மாடல் பள்ளி, அதே போல அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள ஆம்ஆத்மி மெளலான மருத்துவமனை பற்றி சொல்லப்பட்டது. உடனே பள்ளிக்கு மகேஷ்யும், மருத்துவமனைக்கு என்னையும் அழைத்துக் கொண்டு முதல்வர் பார்வையிட்டு அடுத்த நாள் சட்டமன்றத்தில் வந்து 110 – விதியின் கீழ் இந்த 2 செய்தியையும் அறிவித்தார். மாடல் ஸ்கூல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும், டெல்லியில் உள்ள மருத்துவமனை போல தமிழ்நாட்டில்708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என தெரிவித்து21மாநகராட்சி 63 நகராட்சிகளில் செயல்படுத்தபடும் என அறிவித்த 4 மாதங்களில் 500 மருத்துவமனைகள் கட்டி முடித்து முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. 708 மருத்துவமனைகளில் திருச்சி மாநகராட்சிக்கு 36-ம், மணப்பாறை துறையூர் பகுதிக்கு தலா 1-ம் ஒதுக்கப்பட்டது. இதில் 25 முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது மீதமுள்ளதில்  13 -ன்றுமும் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காண தயாராகி வருகிறது. ஒரு மாவட்டத்தில் 38-க்கு 38ம் கட்டி முடிக்கப்பட்டு 100% முடிவடைந்து திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

2012-லிருந்து மத்திய அரசு சிறப்பாக உள்ள மருத்துவமனைகளுக்கு விருது தருகிறார்கள். விருதின் பெயர் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது ஏறத்தாழ 11 ஆண்டுகளாக வழங்கப்பட்டதில் தமிழ்நாட்டிற்கு இதுவரை 556 விருதுகள் கிடைத்து இருக்கிறது. தமிழக முதல்வர் பதவியேற்று 2 ஆண்டுகளில் 487 விருதுகள் கிடைத்துள்ளது. 556 – 487 போனால் மீதமுள்ள 69 மட்டும் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வாங்கிய விருதுகள்.

அதிலிரும் ஒரு சிறப்பு 38 மாவட்டங்களில் திருச்சி மாவட்டம் மட்டும் 14 விருதுகள் மணப்பாறை உள்பட வாங்கியுள்ளது. மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளதற்கு இது ஒரு உதாரணம். 2017- லிருந்து மத்திய அரசு இன்னொரு விருதை தருகிறது. அது என்னவென்றால் மகப்பேறு அறைகளை சிறப்பாக கண்காணித்தழ், கர்ப்பிணி தாய்மார்களின் அறுவை சிகிச்சை அரங்கை பராமரித்தல், உதவி செய்தல் போன்றவற்றிக்காக  லட்சியா விருதுகள் வழங்கப்படுகின்றன.


தமிழகத்திற்கு கடந்த 7 ஆண்டுகளில் 79 விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆண்டு கால கழக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள விருதுகள் 50,100-க்கு 200% கூடுதலாக விருதுகள் பெற்று உள்ளோம். இந்த 50-லில் 38 மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டில் 5 லட்சயா விருது திருச்சி மாவட்டத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. இதில் மணப்பாறையும் அடங்கும் என அமைச்சர் பேசினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *