திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் 89.60லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்து அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், திருச்சி உதவி ஆணையர் லெட்சுமணன், திருவானைக்காவல் உதவி ஆணையர் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், திருப்பட்டூர் கோவில் செயல் அலுவலர் ஜெய்கிஷன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முன்னதாக அமைச்சர்கள் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் மூலஸ்தானத்தில் மூலவரை தரிசனம் செய்து வழிப்பட்டதை தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 23 November, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments