திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று (23.11.2023 வியாழக்கிழமை) முதல் டிசம்பர் மாதம் 4-ந் தேதி வரை திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தகத்தில் விழாவினை அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து உரையாற்ற இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி மாநகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இன்று மாலை துவங்க உள்ள புத்தகத் திருவிழா நடைபெற உள்ள மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக நிறைந்து காணப்படுகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் 26.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பத்தக்கது.


இந்த புத்தகத்தில் விழாவிற்கு திருச்சி மாவட்டமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான புத்தக வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு இந்த மைதானத்தை மழை நீர் தேங்காதவாறு செப்பனிட என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 23 November, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments