திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளது. இதற்கான திருச்சி மாவட்ட வீராங்கனைகள் தேர்வு நவ. 29ம் தேதி காலை 8:30 மணிக்கு அண்ணாமலை நகர் சவுடாம்பிகா ஏகேகேவி பள்ளியில் உள்ள திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க அகாடமியில் நடக்கிறது.
2010ம் ஆண்டு ஆக. 31ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள் தங்கள் ஆதார் நகல், வயது சான்றிதழ், படிக்கும் கல்வி நிறுவ னங்களின் உறுதி சான்றிதழுடன் தேர்வில் கலந்து கொள்ள காலை 8:00 மணிக்கு வெள்ளை ஆடை மற்றும் தங்கள் சொந்த கிரிக்கெட் உபகரணங்களுடன் வர வேண்டும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் குமார் – 7010757073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments