முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடி மரத்தில் கழக இரு வர்ண கொடியை கழக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கொடி ஏற்றினார்.
தலைமை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா மாவட்டக் கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக அணிகளுக்கான கருத்துரை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக பொதுச் செயலாளர் நீர்வளத்துரை அமைச்சர் துறை முருகன் கருத்துரை வழங்கினார்.
Comments