திருச்சி மாநகர் பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஆங்காங்கே குழி தோண்டப்பட்டு உள்ளது. இதனால் சாலைகள் மிக மோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்காக குழி தோண்டப்பட்டு அந்த சாலை புதிதாக போடப்பட்டது. ஆனால் இந்த சாலையில் மேடு பள்ளங்கள் இருந்தாலும், ஆங்காங்கே சாலைக் குழியாக உள்ளது. இந்த சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அப்போது இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் சிக்கி விபத்துக்கு உள்ளாகிறது. நேற்று மட்டும் மூன்று வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். இது குறித்து திருச்சி விஷன் கவனத்திற்கு பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடியாக கண்டோன்மெண்ட் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ் அறிவுரைப்படி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிராஜுதீன், தலைமை காவலர் சுகுமார் ஆகியோர் மண்வெட்டி கொண்டு அங்கிருந்த மண்ணை வைத்து அந்தப் பள்ளத்தை மூடினார். இதனால் அந்த சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். ஜங்ஷன் பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் இருந்தும் அந்த பெரிய பள்ளத்தை மூட யாரும் முன் வரவில்லை. அந்த வழியாக செல்லக்கூடிய மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் இதை கவனத்தில் கொண்டு அந்த பள்ளத்தை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தக்கூடிய பள்ளம் இருப்பது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த உடன் உடனடியாக வந்து அந்த பள்ளத்தை மூடி சரி செய்தனர். எது எப்படி இருந்தால் என்ன என கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் மத்தியில் மற்றவர் நலனின் அக்கறை கொண்டு உடனடியாக செயல்பட்ட கண்டோன்மெண்ட் போக்குவரத்து போலீசருக்கு வாகன ஓட்டிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments