திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (71). இவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்…. நான் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். திருப்பராய்த்துறையில் ஒரு பாடல் பெற்ற மிகவும் பழமையான சிவத்தலம் உள்ளது. அந்த திருத்தலத்தில் கடந்த 30 வருடங்களாக நான் உழவாரப்பனையும் சிவத்தொண்டும் சிவனடியார்களுக்கு சேவையும் செய்து வருகிறேன். கோயிலில் பூஜை புனஸ்காரங்கள், தெய்வீக பணிகள் ஏதும் சரிவர நடைபெறவில்லை மற்றும் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள ஊழியம் வழங்கப்படவில்லை.
ஆகவே கோயிலின் நிலை அறிய, உண்மையை வெளி கோணறு பொருட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒரு ஆர்டிஐ போட்டேன். அதற்கு 30 நாட்கள் ஆகியும் பதில் கிடைக்காத காரணத்தால், முதல் முறையீடும் செய்தேன். அதன் பின்னர் 160 நாட்கள் கழித்து எனக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதில் எந்த ஒரு தகவலும் சரிவர தரவில்லை ஆகவே இரண்டாவது முறையீடு செய்துள்ளேன். கோயிலின் நிர்வாக அதிகாரி ராகினி, நான் ஆர்டிஐ போட்ட காரணத்தினால் எனக்கு கோயிலில் உழவாரப்பணி செய்வதற்கு தடை விதித்து விட்டார்.
சிவனடியார்களுக்கு நான் எந்த ஒரு சேவையும் செய்யக்கூடாது எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் முன் நின்று நடத்தக் கூடாது என்று கட்டளை போட்டுவிட்டார். கோயிலின் நிர்வாக அதிகாரி எனக்கு கோயிலுக்கு சென்று சிவனை தரிசிக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார். மற்றபடி கடந்த 30 ஆண்டுகளாக நான் செய்து வந்த உழவாரப்பணி, சிவனடியார் சேவை, சிவத்தொண்டு ஆகிய எதையும் செய்யக்கூடாது என்று கட்டளை போட்டுவிட்டார்.
இதற்காக நான் இரண்டு முறை முதல்வனின் முகவரியில் எனது கோரிக்கையை பதிவேற்றம் செய்தேன். ஆனால் அவை இரண்டும் கோயில் நிர்வாக அதிகாரி அவர்களின் பதில் கடிதத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. ஆர்டிஐ போட்ட காரணத்தினால் தடை செய்யப்பட்ட, கடந்த 30 வருடங்களாக நான் செய்து வந்த சேவைகளை மீண்டும் தொடர்வதற்கு அனுமதி தர வேண்டும் தங்களிடம் எனது தாழ்மையான வேண்டுகோள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments