Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

இந்தத்துறைகளில் கவனம் செலுத்துங்கள் மோதிலால் ஓஸ்வால் அறிவுரை

செவ்வாய் அன்று மீண்டும் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன, பிஎஸ்இ சென்செக்ஸ் 431 புள்ளிகளும் என்எஸ்இ நிஃப்டி 168 புள்ளிகள் அதிகரித்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வெற்றியைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் சந்தை நம்பிக்கை அதிகரிக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் எதிர்பார்க்கிறது. 2024 பொதுத் தேர்தலுக்குப்பிறகும் தற்போதைய அரசாங்கம் மற்றும் அரசியல் தொடர்ச்சியின் அடிப்படையில் சந்தையின் இந்த போக்கு தொடரும் என்று தரகு எதிர்பார்க்கிறது. மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் கூற்றின்படி… வரலாறு காட்டுவது போல், லோக்சபா தேர்தலுக்கு முந்தைய ஆறு மாதங்களில் 1990ம் ஆண்டு முதல் ஐந்து முறை நிஃப்டி 10 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை திரும்பியுள்ளது.

சந்தைக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், இந்தியாவின் மேக்ரோ மற்றும் மைக்ரோ அடிப்படைகள் ஒப்பீட்டளவில் வலுவானதாக இருக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் எதிர்பார்க்கிறது. இது பின்வரும் காரணிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது :

● உற்பத்தி மற்றும் முதலீட்டுத் துறைகள் 1HFY24ல் 7.7 சதவிகித உண்மையான GDP வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

● இந்தியப்பங்குச் சந்தையின் உறுதியான பெருநிறுவன வருவாய் 

● இரண்டாம் நிதியாண்டின் Q2 மற்றும் அக்டோபர்-நவம்பர் 23க்குப் பின்னரும் வருவாய் வேகம் தொடர்கிறது.

● உச்சநிலை விகிதங்களுடன் உலகளாவிய மேக்ரோ பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருக்கிறது.

● நிஃப்டி வருவாயை விட 17.8 மடங்கு விலையில் வர்த்தகம் செய்வதன் மூலம் கவர்ச்சிகரமான மதிப்பீடுகள் அதன் நீண்ட கால சராசரியான 20 மடங்கு குறைவாக இருக்கிறது.

நான்கு மாநில தேர்தல்களில் மூன்றில் பிஜேபி வெற்றி பெற்ற பிறகு, புரோக்கரேஜ் சாய்ந்த சில துறை சார்ந்த பங்குகளின் பட்டியல் இங்கே…

1) வங்கித்துறை : பாரத ஸ்டேட் வங்கி நேற்றைய வர்த்தகத்தில், எஸ்பிஐ பங்குகள் முந்தைய இறுதி விலையிலிருந்து 2.31 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கிற்கு ரூபாய் 608.40 ஆக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில், பங்கு 2.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி : ஆக்சிஸ் வங்கியின் பங்கு .52 சதவிகிதம் உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.11,032.10 ஆக இருந்தது. முந்தைய ஆறு மாதங்களில் 19 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 25 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

2) ஆட்டோமொபைல் துறை : மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் இப்பங்குகள் நேற்று 1.71 சதவிகிதம் அதிகரித்து ஒரு பங்கிற்கு ரூபாய் 1,685.10 ஆக இருந்தது, முந்தைய நாளின் முடிவில் இருந்து. கடந்த ஆறு மாதங்களில் 21 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 33 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் நேற்றைய வர்த்தகத்தில் இப்பங்குகள் 0.26 சதவிகிதம் ரூபாய் 3805.55 ஆக உயர்ந்தது. 52 வாரங்களில் ஒரு பங்கின் உட்சபட்ச விலையான ரூபாய் 3,889க்கு அருகில் இருந்தது. முந்தைய ஆறு மாதங்களில் 32 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 36 சதவீதமும் பங்கு விலை உயர்ந்துள்ளது.

3) தொழில் துறை : லார்சன் & டூப்ரோவின் பங்குகள் 0.5 சதவிகிதம் உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்ச விலையாக ரூபாய் 3,347.5 அருகில் வர்த்தகமாகிறது. முந்தைய ஆறு மாதங்களில் 46 சதவிகிதமும் கடந்த ஆண்டில் 59 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

அல்ட்ராடெக் சிமெண்டின் பங்கு 0.10 சதவிகிதம் உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்ச விலையான ரூபாய் 9, 400 ஆக இருந்து.பின் 9326.80ல் வர்த்தகத்தை நிறைவு செய்தது கடந்த ஆறு மாதங்களில் 18 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 30 சதவிகிதமும் பங்கின் விலையானது அதிகரித்துள்ளது.

4) ரியாலிட்டி துறை : கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸின் பங்கு 0.46 சதவிகிதம் குறைந்து ரூபாய் 1906.85 ஆக நிறைவு செய்தது, 52 வாரங்களில் அதிகபட்சமாக ஒரு பங்கிற்கு ரூபாய் 1,943 ஆனது. கடந்த ஆறு மாதங்களில் 36 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 42 சதவிகிதமும் இப்பங்கின் விலை அதிகரித்துள்ளது.

சன்டெக் ரியாலிட்டியின் பங்குகள் முந்தைய இறுதி விலையிலிருந்து 0.20 சதவிகிதம் குறைந்து ரூபாய் 491.70 ஆக இருந்தது. பங்கு முந்தைய ஆறு மாதங்களில் 74 சதவிகிதமும் கடந்த ஆண்டில் மட்டும் 26 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

5) நுகர்வோர் பொருட்கள் துறை : டைட்டன் கம்பெனி லிமிடெட், டைட்டனின் பங்கு 1.68 சதவிகிதம் உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூபாய் 3,550 ஆக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் 22 சதவிகித வருவாயையும், கடந்த ஆண்டில் 33 சதவிகிதமாகவும் பங்கின் விலை அதிகரித்துள்ளது.

6) விருந்தோம்பல் துறை : இந்தியன் ஹோட்டல் கம்பெனியின் பங்குகள் முந்தைய நெருங்கிய விலையிலிருந்து 0.17 சதவிகிதம் அதிகரித்து புதிய உட்சபட்ச விலையான ரூபாய் 436.70க்கு நிறைவு செய்தது. கடந்த ஆறு மாதங்களில் 11 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 35 சதவீதமும் பங்கு வளர்ச்சியை கண்டுள்ளது.

லெமன் ட்ரீ பங்குகள் முந்தைய இறுதி விலையிலிருந்து 0.74 சதவிகிதம் குறைந்து ஒரு பங்கின் விலை ரூபாய் 114.65 ஆக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் 23 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 17 சதவிகிதமும் இப்பங்கின் விலை அதிகரித்துள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் மோதிலால் ஓஸ்வால் கவனத்தை செலுத்த சொல்கிறது. விலை சற்றே அதிகம்தான் என்றாலும் நூறு கழுதையை மேய்ப்பதைவிட 2 யானைகளை வளர்ப்பது பெருமை அல்லவா.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *