திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் வெளியீடுள்ள செய்திக்குறிப்பில் ….. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக் கொள்ள நாளை (09.12.2023) (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல் – வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல இந்த மக்கள் நீதிமன்றம் வாய்ப்பாக அமைய உள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments