Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் சிறப்பு கண் மருத்துவ முகாம்

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வருமுன் காப்போம் திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து சிறப்பு கண் மருத்துவ முகாம் இன்று (10.12.2023) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி புத்தூர் அருணா திரையரங்கம் அருகில் உள்ள ராமகிருஷ்ண நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமினை ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை மாவட்ட ஆளுநர் (2025 – 2026) Rtn. J. கார்த்திக் முகாமை துவங்கி வைக்க, Rtn. Major Donor Dr. K. ஸ்ரீநிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கண் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் சிறப்பு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் Assistant Govinor Rtn.யோகநாதன் குமார், Regional Coordinator Rtn. ஜானகி ராஜசேகர், President Rtn.சுபா, Secretary Rtn. பராசக்தி, Treasurer Rtn.ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *