திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அறிவுரைப்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கான சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்ற வரி மற்றும் வரியில்லா இனங்களில் (2023-2024) வரையிலான காலத்திற்கு நிலுவை வைத்துள்ள நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வார்டு குழு அலுவலகம் 5ல் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமலிருந்த வார்டு 23 தேவர் காலனி, வார்டு 25 கல்லாங்காடு, வார்டு 26 வண்ணாரப்பேட்டை மற்றும் வார்டு 55 பிராட்டியூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 9 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் 190 கட்டிடங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஜப்தி அறிவிப்பு சார்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு (31.03.2024) வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடன் செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு நடவடிக்கைகளை தவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments