Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

கதி கலங்க வைத்த காக்னிசண்ட்… ஊழியர்கள் பீதி

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக சிடிஎஸ் என்று அழைக்கப்படும் காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் சென்னை சிறுசேரியில் உள்ள 14 ஏக்கர் வளாகத்தையும், ஐதராபாத் கச் சிபவுலியில் உள்ள 10 ஏக்கர் வளாகத்தையும் விற்கப்போவ தாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், இந்நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் பணியாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என உறுதியாக சொல்லப்படுகிறது. இந்நிறுவனம், தனது லாபத்தை அதிகரிக்க மேற்கொள்கிற சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாகத் தான் மேற்கொண்ட வளாகங்களை விற்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிடிஎஸ் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூபாய் 3,321 கோடி) மிச்சப்படுத்த முடியுமாம். 

இதற்காகத்தான் சிடிஎஸ் தனது ஒட்டுமொத்த சொத்துக்களை மறுமதிப்பீடு செய்து வருகிறது. சில கட்டடங்களில், அவற்றின் உரிமையாளர்களுடன் பேசி வாடகையை குறைத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்கிறார்கள். நடப்பு ஆண்டு செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபத்தில் 10 சதவிகிதம் சரிவு காணப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நிகர லாபம் 525 மில்லியன் டாலர் (சுமார் ரூபாய் 4,374 கோடி) கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் நிகர லாபம் 626 மில்லியன் டாலர் (சுமார் ரூபாய். 5,223 கோடி).

இது பற்றி அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரவிகுமார் கூறுககையில்,…. “மூன்றாவது காலாண்டில், பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் நிறுவனத்தின் அடிப்படைகளை அதிக வாடிக்கையாளர் திருப்தி, முன்பதிவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சி ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் வலுப்படுத்தி உள்ளோம். வாடிக்கையாளர்களின் செலவுகளைக் குறைக்கவும், டிஜிட்டல் முறையில் தங்கள் வணிகங்களை மாற்றவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துக்கு மாறவும் காக்னிசன்ட் நிறுவனத்தை சிறந்த நிலையில் வைக்கவும் நாங்கள் முதலீடு செய்கிறோம்” என்றார்.

சிடிஎஸ் நிறுவனத்தில் செப்டம்பர் 30வுடன் முடிந்த காலாண்டு நிலவரப்படி 3 லட்சத்து 46 ஆயிரத்து 600 பேர் பணியாற்றுகின்றனர். இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 1000 ஊழியர்கள் அதிகம் ஆகும். அதே நேரத்தில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 2,800 குறைவு என சொல்கிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *