திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பாக சிறார்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள (HOUSE OF HOPE) ஹவுஸ் ஆப் ஹோப் இல்லத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவியாளர் வைத்தியநாதன், பச்சிளம் குழந்தைகள் சிறப்பு அரசு மருத்துவர் செந்தில்குமார், சுவை பிரியாணி உரிமையாளர் முகமது ரபீக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் நடனமாடி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவியாளர் வைத்தியநாதன் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு அரசு மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். பின்னர் மாணவிகளுக்கு அற்புதா ஸ்வீட்ஸ் நிர்வாகத்தினர் இனிப்புகள் வழங்கினர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு தேவையான தலையனை, வாளி, குவளை, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டது. மேலும் இல்லத்தில் உள்ள அனைத்து மாணவிகளுக்கு சுவை பிரியாணி நிர்வாகத்தின் சார்பில் இரவு உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. திருச்சி விஷன் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments