லால்குடி காவல் எல்லைக்குட்பட்ட காட்டூரிலிருந்து கொப்பாவளி பிரிவு ரோடு அருகே பசுமைகுமாா் (30) என்பவரை மூன்று போ் கத்தி மற்றும் டம்மி கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.1500 வழிப்பறி செய்ததாக திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு தகவல் வந்தது.
அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் உத்தரவின்பேரில், லால்குடி பகுதியில் காவல்துறையினா் விசாரணை நடத்தி, லால்குடி பகுதி ராஜா (29), ராகவன் (27), மற்றும் கருணா (23. ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து,அவா்களிடமிருந்து, வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் டம்மி கைத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
Comments