Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தமிழ்நாட்டிற்கு வந்ததால் புதிய சக்தி கிடைக்கிறது – திருச்சியில் பிரதமர் பேச்சு

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய மாதவராவ் சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய மாதவராவ் சிந்தியா பேசுகையில்… திருச்சி ஆன்மீகத்திற்கான சிறந்த நகரமாக உள்ளது – திருச்சிக்கு மிக அழகான விமான நிலையத்தை பிரதமர் உருவாக்கி தந்துள்ளார். திருச்சி விமான நிலையத்தை மக்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சேலம் விமான நிலையம் தற்போது தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கூடுதாலாக 75 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டுகள் பயணிகள் பயன்படுத்தும் வகையில் தான் இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் என்பது பயனத்திற்கு மட்டும் அல்ல நகரத்தின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்க கூடியது 2025க்குள் நாட்டில் உள்ள 121 விமான நிலையம் பசுமை விமான நிலையமாக மாற்றப்படும். சேலம், நெய்வேலி, வேலூர் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். 42 கோடி பயணிகள் நாடு முழுவதும் விமான நிலையங்களால் பயனடைந்து உள்ளனர். திருச்சி விமான நிலையம் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுகையில்…. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும். சென்னையில் இருந்து – பினாங்கு டோக்கியோ போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவையை கொண்டு வர பிரதமர் வழிவகை செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

திருச்சி BHEL நிறுவனத்தை நம்பி இருந்த MSME தொழில் நிறுவங்கள் நலிவடைந்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரதமர் BHEL நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் – அவ்வாறு செய்தால் MSME தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.நெல்லை, தூத்துகுடியில் நடந்த பேரிடரை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மெட்ரோ ரயில் திட்டம் தொகுதி – 2 ( Phase 2 ) நிதியை விரைந்து வழங்க வேண்டும்.

இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையில்….. தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கனமழை காரணமாக கடந்த சில வாரங்கள் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம். விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். சினிமாவில் மட்டும் அல்ல அவர் அரசியலும் கேப்டனாக இருந்து வந்துள்ளார். விஜயகாந்த் மக்களின் இதயத்தை கொள்ளை கொண்டு உள்ளார். தேசிய நலனுக்கு விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

வரக்கூடிய 25 ஆண்டுகளில் நாம் மிகவும் வளர்ச்சியான நாடாக நாம் மாற்ற வேண்டும். பாரத நாடின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழகத்திற்கு வரும் போது எல்லாம் ஒரு புதிய சக்தியை நான் நிரப்பி செல்கிறேன். திருச்சி நகரம் என்றாலே வளமான வரலாற்று சான்றுகள் உள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர். தமிழ் கலாச்சாரம் குறித்து நண்பர்கள் கற்றுக் கொண்டுள்ளேன். உலகில் எங்கு சென்றாலும் தமிழகத்தை பற்றி தமிழ் மொழியை பற்றி நான் பேசாமல் வர மாட்டேன். டெல்லி செங்கோட்டையில் செங்கோல் நிறுவப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்பை நாடு பெற்றுள்ளது. கட்டுமானம் மற்றும் சமூம கட்டமைப்பில் இது வரை இல்லாத அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. பெரிய முதலீட்டாளர்கக் எக்லாம் நம் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறீர்கள். தமிழ்நாடு மேக் இன் இந்தியா திட்டத்தில் பிராண்ட் அம்பசேடாராக மாறி கொண்டுள்ளது.

மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்பதை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறோம். தமிழகம் விரைவான வளர்ச்சி பெறும் போது கண்டிப்பாக தமிழக வளர்ச்சியால் நாடும் வளர்ச்சி அடையும். புதிய விமான முனையம் காரனமாக இனைப்பு திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும். திருச்சியில் விமான இனைப்பின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வசதி. புதிய வணிகம் போன்ற பல சிறப்புகள் கிடைக்கும். தமிழகத்தில் ரயில் இனைப்புளை மேலும் வழு சேர்க்க ஐந்து புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், சிதம்பரம், வேலூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா இடங்களை அனைவரும் வந்து பார்க்க இந்த புதிய ரயில் சேவைகள் உதவும்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் கவனம். கடற்கரை கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக மீன் வளத்துறைக்கு நாம் தனி துரையை உருவாக்கினோம். காமராஜர் துறைமுகம் கொள்திறனை நாம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளோம். இதன் வாயிலாக ஏற்றுமதி இறக்குமதிக்கு புதிய சக்தி கிடைக்க வழிவகை செய்துள்ளோம். கான்கிரீட் வீடுகள், கழிப்பிடம் மற்றும் கேஸ் இணைப்புகளை நாம் வழங்கி வருகிறோம். 2014க்கு முன்னர் 30 லட்சம் மட்டுமே வழங்கி வந்தனர். ஆனால் 10 ஆண்டுகளில் 120 லட்சம் கோடி தமிழகத்திற்கு நம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *