திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர், கவர்னர், மற்றும் முதலமைச்சர் கலந்து கொண்டனர். இதற்காக பாதுகாப்பு பணியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி தரம் இல்லாமல் கொடுத்ததோடு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என போலீசார் குமுருகின்றனர்.
மேலும் அவர்களுக்கு பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் காலை முதல் டீ, பிஸ்கட் கூட கொடுக்கவில்லை என்றும், குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், அவர்களுக்கு காலை உணவாக பொங்கல் மற்றும் சாம்பார் கொடுத்துள்ளனர். அதுவும் கெட்டுப்போய் இருந்ததால் அதை சாப்பிடாமல் அப்படியே முட்புதரில் தூக்கி வீசி உள்ளனர்.
இதனால் பாதுகாப்பு பணியில் பட்டினியுடனும், தாகத்துடன் 1500 போலீசார் தங்களது கடமையை செவ்வனே செய்து முடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடமைக்கு உணவு கொடுத்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்பாடு வேதனை அளிப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments