Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக் அள்ளிக்குவிக்குது ஆர்டர்களை

ஆல்ஃபா டிரான்ஸ்பார்மர்ஸ் லிமிடெட் சிறிய விநியோக மின்மாற்றிகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனமாக திகழ்கிறது மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப உதவி மற்றும் சேவைகளை வழங்குகிறது. நிறுவனம் ரூபாய் 7,40,00,000 மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

ஆர்டர் எண் 1 : நிறுவனம் ரூங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் OCL அயர்ன் & ஸ்டீல் லிமிடெட் ஆகியவற்றிலிருந்து ரூபாய் 3.28 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இந்த ஆர்டரில் ஆஃப்-லோட் டேப் சேஞ்சர்களுடன் கூடிய மின்மாற்றிகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் வழங்கல் ஆகியவை அடங்கும், மேலும் பிப்ரவரி 2024க்குள் முடிக்கப்படவேண்டும்

ஆர்டர் எண் 2 : டாடா பவர் லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான Tata Power Southern Odisha Distribution Limited (TPSODL) நிறுவனத்திடமிருந்து ரூபாய் 3.59 கோடி மதிப்புள்ள 2 ஆர்டர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஆலையில் நிறுவப்படுகிறது.

ஆர்டர் எண் 3 : லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T Ltd) நிறுவனத்திடமிருந்து 53 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது. இந்த ஆர்டரில் டிரான்ஸ்பார்மர்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் வழங்கல் ஆகியவை அடங்கும் மற்றும் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.

நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், ஆல்ஃபா டிரான்ஸ்பார்மர்ஸ் லிமிடெட் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து 52 வாரத்தின் புதிய உயர்வான ரூபாய் .82.11 ஆக நிறைவு செய்தது. சமீபத்திய வர்த்தக அமர்வுகளில், பங்குகள் மீண்டும் மீண்டும் அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகி வருகிறது.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூபாய் 75 கோடியாக இருக்கிறது. பங்கு வர்த்தகம் குறைந்த PE 9x மற்றும் 39 சதவிகிதம் அதிக ROE உள்ளது. இந்த பங்கு 6 மாதங்களில் 120 சதவிகிதம், 1 வருடத்தில் 600 சதவிகிதம் மற்றும் 2 ஆண்டுகளில் 860 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது. முதலீட்டாளர்கள் இந்த மைக்ரோ கேப் ஸ்டாக் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

(Disclimer : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனை அல்ல.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *