திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு 149 விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் .
மேலும் தமிழக முதல்வர் கூறும் மிக முக்கியமான இரண்டு துறைகள் மருத்துவம் மற்றும் பள்ளி கல்வித்துறை என்றும், இவ்விரண்டும் எனது இரு கண்களை போன்றது என்றும் கூறுவார் எனக் கூறி பெருமிதம் கொண்டார். இதில் சிறந்த முறையில் விளங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறுவார்.
நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளிகளை மேம்படுத்த பல வழிகளில் சிறந்த முறையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் ஆகியோர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments