திருச்சியிலிருந்து நேரடியாக திருவனந்தபுரத்திற்கு விமான சேவை இல்லை. ஆனால் திருவனந்தபுரம் செல்லும் பயணிகளுக்கு அரிய வாய்ப்பாக போயிங் விமானம் மிக குறைந்த விலையில் திருவனந்தபுரம் செல்ல குறைந்த விலை டிக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது.
திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் 1 மணி நேரத்தில் செல்லும் போயிங் விமானத்தில் 3505 ஒரு பயணிக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த விமானம் திருவனந்தபுரம் காலியாக செல்ல இருப்பதால் அந்த விமானத்தில் செல்ல பயணிகளுக்கு குறைந்த விலை டிக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது.
189 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்யலாம். திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு (IX 6004) 03:30 மணிக்கு புறப்பட்டு 04:30 மணிக்கு போய் சேரும்.
அதேபோல் IX 4006 திருவனந்தபுரத்திலிருந்து (02:35) புறப்பட்டு திருச்சிக்கும் (03:35) மணிக்கு நாளை (05.01.2024) வர முடியும். அதற்கான அறிவிப்பை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments