திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (65. இவர் நேற்று துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் உறவினர் இல்ல துக்க நிகழ்வுக்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
பின்னர் மதியம் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து நடராஜன் துறையூர் காவல் நிலையத்தில் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடராஜன் வீட்டில் திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments