நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி இருந்தார்.
3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம் என்பதால் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி
தமிழ்நாடு முழுவதும் 1,847போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் திருச்சி மாநகர், மாவட்டம் மற்றும் திருச்சி ரெயில்வே போலீசார் 80 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments