Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மார்ச் 1ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதால் தேர்தல் வேலையை ஆரம்பிக்க அதிமுகவினருக்கு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் திருச்சியில் வேண்டுகோள்!!

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி மற்றும் மகளிர் குழு அமைத்தல் மாநகர் மாவட்ட கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

Advertisement

இந்நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை ஏற்று நடத்தினார். தலைமை ஏற்று பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது வந்திருக்கும் நடிகர்களெல்லாம் புரட்சித்தலைவர் எம் ஜி ஆரை போல நல்லாட்சி நடக்கும் என்றுதான் கூறுகிறார்கள்புதிய கட்சியைத் தொடங்கும் நடிகர்களும் மற்றவர்களும் அறிஞர் அண்ணாவையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியை குறித்துதான் சந்தித்துப் பேசுகிறார்கள் அவர்களுடைய ஆட்சி நல்லாட்சி என்றும் கூறுகிறார்கள் ஆனால் அப்படி கலைஞரை எந்த ஒரு நடிகர்களும் குறிப்பிட்டு பேசுவதில்லை. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுக தலைவர் கருணாநிதி ஆரம்பிக்காத தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அன்று மலையாளியான எங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் முதல் முதலில் துவங்கினார். இப்படி எத்தனையோ திட்டங்கள் சாலை வசதிகள் நிறுவனங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அதனால் 350 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக வேளாண்மண்டலம் விவசாயிகளுக்கு வேண்டிய நன்மைகளை இப்படி எத்தனையோ திட்டங்களை அதிமுக ஆட்சியிலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சராக இருந்த ராஜா எங்கள் அம்மாவை பற்றி மிக இழிவாகப் பேசுகிறார்.

Advertisement

எங்கள் அம்மாவை பற்றி பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் எவனுக்கும் தகுதி இல்லை யோகிதை இல்லை. நிருபர்கள் ஜெயலலிதா பற்றி கேட்டபோது கருணாநிதி சொன்ன வார்த்தை ஒரு தைரியம் மிக்க இரும்பு பெண்மணி என்று கூறினார். அவரிடம் பிடித்ததே அவருடைய தைரியம் என்று சொன்னவர் கருணாநிதி. அதை தான் ராஜாவுக்கு சொல்கிறேன் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது அதிலிருந்து வெளியே வந்தவுடன் பேசுங்கள்.

Advertisement

ஊழலைப் பற்றி பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த தகுதியும் இல்லை.ஏனென்றால் சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்கள் என்று சர்க்காரியா சொல்லியிருக்கின்றார். அரசியல் நாகரீகம் கூட தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின் . இந்த இயக்கம் எந்த நிலையிலும் எப்பொழுதும் தனித்துவமிக்க இயக்கம்.ஜெயலலிதா சொன்னது அவர் மறைவுக்குப் பிறகும் நூறு ஆண்டுகாலம் இருக்கும் ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் என்றார்.அதற்கு நாம் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் அதுதான் நமது பூத் கமிட்டி இளைஞர் இளம்பெண்கள் பாசறை. மார்ச் 1ஆம் தேதி தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதால் இன்னும் ரெண்டு மாதம் பத்து நாட்கள் தான் உள்ளது. ஒவ்வொரு கட்சிக்காரரும் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் இந்த இரண்டு மாதம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரே நோக்கில் நமது செயல்பாடுகள் வேறு எதையும் சிந்திக்காமல் ஆரவாரமில்லாமல் வெற்றி வாய்ப்புக்கு செயல்வடிவம் கொடுக்க கேட்டுக் கொண்டார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *