Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன் சமூக வலைத்தளங்களில் நேரலை செய்த இளைஞர்கள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லியம்பத்து. ஆளவந்தான்நல்லூர், மருதாண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், உத்தரவின் பேரில்,

மேற்கண்ட இடங்களில் சோமரசம்பேட்டை காவல்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது, அங்கு 1) ராகுல் (20) த/பெ பழனிச்சாமி, குறிஞ்சி நகர், மருதாண்டாக்குறிச்சி, 2) பரமகுரு (எ) மனோஜ் த/பெ செல்வம், ஆளவந்தான்நல்லூர், 3) மதன்குமார் (20) த/பெ ராமலிங்கம், அமையநல்லூர் மல்லியம்பத்து, மருதாண்டாக்குறிச்சி, 4) சரவணன் (21) த/பெ கல்நாயக்கன் தெரு, உறையூர் மற்றும் 5) பதன்ராஜ் (17) த/பெ பொன்னுசாமி, அரிஜன தெரு, ஆளவந்தான்நல்லூர் ஆகியோர் கையில் அபாயகரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு, அங்கு கடந்து செல்பவர்களிடம் “நாங்க இந்த ஏரியாவில் பெரிய ரவடிங்கடா என்றும், எங்ககிட்ட கஞ்சா வாங்கிட்டு போங்கடா என்றும், இல்லையென்றால் தலை துண்டாகிடும் என்றும்” மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், காவல்துறையினரை கண்டதும் தப்ப முயன்றவர்களை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கைது செய்து நிலையம் அழைத்து வந்து, மேற்படி 5 நபர்களின் மீதும், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நேரலையாக வீடியோ (Live video) பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். மேற்படி வழக்கின் எதிரிகளில். A1) ராகுல் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட 2 வழக்குகள், A2) பரமகுரு என்பவர் மீது 4 வழக்குகள், A3) மதன்குமார் என்பவர் மீது 7 வழக்குகள். A4) சரவணன் என்பவர் மீது ஒரு வழக்கும் என மேற்படி நபர்கள் மீது ஏற்கனவே திருச்சி மாவட்ட மற்றும் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

மேலும் இது போன்று அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள். போதை பொருட்களை பயன்படுத்தும் விதமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடும் நபர்கள், அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் மற்றும் பிற விழா காலங்களில் கேக்குகள் வெட்டும் நபர்கள். வில்லன்கள் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல் மற்றும் வீடியோக்களை YouTube, Facebook, Instagram, Whatsapp மற்றும் Twitter போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்களின் விபரங்களை திருச்சி மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள கண்காணிப்பு குழு (Social Media Cell) மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *