காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதத் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று (09.01.2023) வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறிவிப்பு கொடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் திட்டமிட்டபடி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி மாவட்டத்திலிருந்து 1500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் மாநகர் புறநகர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மாநகரில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு இடையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய பேருந்து நிலையம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பேருந்து ஓட்டுனரை அண்ணா தொழிற்சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கடுமையாக ஆபாச வார்த்தைகளில் திட்டி பேருந்து எடுக்கக் கூடாது பணிமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
பொதுமக்களே ஆதரவு கொடுக்கும் பொழுது நீ ஏன் பேருந்து ஓட்டுகிறாய் என தொடர்ந்து கடுமையாக திட்டினார். சிறிது நேரத்தில் குறைந்த பயணிகளுடன் அந்த பேருந்து புறப்பட்டு சென்றது. இது மட்டுமில்லாமல் திருச்சி மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments