திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 93 பேருந்துகள் சென்னை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயங்குகிறது. ஒரு சில பேருந்துகளை இயங்க பணிமனை விட்டு வெளியே வந்த பேருந்தை போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது பேருந்து இயக்கக் கூடாது என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி பேருந்தை பணிமனை வாயிலிருந்து பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் திருச்சி – புதுக்கோட்டை சாலை டிவிஎஸ் டோல்கேட் பகுதி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை பெய்து கொண்டிருக்கும் பொழுதும் அதனை பொருட்படுத்தாமல், தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments