Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பி.எஃப் பணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

எதிர்காலத்தில் நிதி ரீதியாக வலுவாக இருக்க, பொது வருங்கால வைப்பு நிதி ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாக கருதப்படுகிறது. PPF மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இதில் 7.1 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுகிறது (PPF வட்டி விகிதம்). ஆனால் PPF (பொது வருங்கால வைப்பு நிதி) கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், PPF தொகை யாருக்கு கிடைக்கும் தெரியுமா? மேலும் அதைக் பெருவதற்கான முறை என்ன ? பார்ப்போமா..

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு இந்த வசதியை வழங்குகிறது, இதனால் அவர்கள் திடீர் மரணம் ஏற்பட்டால், PF (பொது வருங்கால வைப்பு நிதி) பலன்களைப் பெறுவதற்குத் தங்கள் நாமினியின் பெயரை முன்கூட்டியே தேர்வு செய்யலாம். அதன்பிறகு, கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் (பொது வருங்கால வைப்பு நிதி) இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் நியமன உறுப்பினர் பிஎஃப் தொகையை கோரலாம்.

PPF கணக்கு முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்தால், இறப்பு உரிமைகோரல்களுக்கு PF (பொது வருங்கால வைப்பு நிதி) கணக்கின் முதிர்வுக்காக ஒருவர் காத்திருக்க வேண்டியதில்லை. உரிமைகோரல் (claim form) படிவத்தை பூர்த்தி செய்யும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். இதன் கீழ், பிஎஃப் தொகையைப் பெற, நாமினி இபிஎஃப் உறுப்பினரின் முழு விவரங்களுடன் படிவம் 20 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இங்கே நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், இந்த விண்ணப்பம் EPF உறுப்பினர் கடைசியாக யாருடன் இணைந்திருந்தாரோ அந்த முதலாளி மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் : இந்தப் படிவத்தை (PPF இறப்புக் கோரிக்கைப் படிவம்) பூர்த்தி செய்யும் போது, ​​PPF கணக்கு எண், பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்கள், மொபைல் எண் போன்ற பல ஆவணங்கள் தேவைப்படலாம். PPF (பொது வருங்கால வைப்பு நிதி) இறப்பு உரிமை கோருவதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியல் பின்வருமாறு.. நாமினியால் நிரப்பப்பட்ட இறப்பு உரிமைகோரல் படிவம், PPF கணக்கு வைத்திருப்பவரின் இறப்பு சான்றிதழ், கணக்கு வைத்திருப்பவரின் பாஸ்புக் ,தேவையான அனைத்து ஆவணங்களுடன் (பொது வருங்கால வைப்பு நிதி) இந்தப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, கோரிக்கைப் படிவத்தின் ஒப்புதலைப் பற்றி நாமினிக்கு செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

அதன் பிறகு க்ளைம் தொகை நாமினியின் வங்கிக் கணக்கிற்கு வரும். மேலும், கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு பிபிஎஃப் கணக்கு செயலில் இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இதனுடன், கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்த பிறகு, பிபிஎஃப்-ல் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி வழங்கப்படாது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *