கையகப்படுத்துதலுக்காக ரூபாய். 450 கோடியை செலவிட்டது, இதில் ரூபாய் 23 கோடி ஈஸ்டர்ன் பண வைப்புத் தொகையாக ஈ-ஏலத்தில் பங்கேற்பதற்காக செலுத்தப்பட்டது, மீதமுள்ள தொகை ஏப்ரல் 7, 2024க்குள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான பின் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 20 சதவிகிதம் உயர்ந்தது கல்யாணி ஸ்டீல்ஸ் பங்குகள்.வர்த்தகத்தின் இறுதியில் 14.93 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 597.40க்கு நிறைவு செய்தது.
நிறுவனத்தின் நிதிநிலைகளின்படி, நிகர வருவாய் ஆண்டுக்கு 4 சதவிகிதம் குறைந்துள்ளது, Q2FY23ல் ரூபாய் 500 கோடியிலிருந்து Q2FY24ல் ரூபாய் 480 கோடியாக இருந்தது. 24ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூபாய் 497 கோடியாக இருந்த அவர்களின் வருவாய் தற்போதைய நிலைகளுக்கு தொடர்ச்சியாக 3.4 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 65 சதவிகிதம் அதிகரித்து, Q2FY23ல் ரூபாய்35 கோடியாகவும், Q2FY24ல் ரூபாய் 58 கோடியாகவும் இருந்தது.
கல்யாணி ஸ்டீல்ஸ் லிமிடெட் ஒரு ஸ்மால் கேப் நிறுவனமாகும், இதன் சந்தை மூலதனம் ரூபாய் 2,600 கோடி, இந்நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 73 சதவிகிதமும், கடந்த ஆண்டில் 69 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. குறைந்த கடன்-ஈக்விட்டி விகிதம் 0.34, ஈக்விட்டி மீதான வருமானம் 11 சதவிகிதம், முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் வருமானம் 13 சதவிகிதம் மற்றும் ஈவுத்தொகையாக 3.3 சதவிகிதம் வழங்கி வருகிறது.
நிறுவனத்தில் நிறுவனர்களுக்கு 65 சதவிகிதமும், பொது மக்களுக்கு 24 சதவிகிதமும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு 3 சதவிகிதமும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு 8 சதவிகிதமும் உள்ளது. கல்யாணி ஸ்டீல்ஸ் லிமிடெட் என்பது இரும்பு மற்றும் எஃகு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம். ஃபோர்ஜிங் மற்றும் இன்ஜினியரிங் தரமான கார்பன் மற்றும் அலாய் ஸ்டீல்கள் நிறுவனத்தின் பிரிவின் ஒரு பகுதியாகும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments