திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (65). இவர் நீதிமன்றம் வழியாக ஹீபர் ரோடு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சென்றது. இதில் சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனம் முன்பகுதி சேதமடைந்தது. பின்னர் நடந்து சென்ற சிறுமி மற்றும் பெண் மீது மோதி அருகில் இருந்த டீக்கடையில் உள்ளே புகுந்து நின்றது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டி வந்த முதியவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் ஹீபர் ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சென்று கொண்டிருந்த நிலையில், சினிமா காட்சிகளில் வருவது போல் கார் தாறுமாறாக ஓடி மூன்று பேர் தூக்கி வீசப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாறுமாறாக ஓடிய கார் டீக்கடையில் மோதி நின்றது. பொங்கலையொட்டி டீ கடை விடுமுறை விடப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments